சமூகம் - நான் ..பதிவுகள்

வகுப்பறை மேஜையில் 
எப்போதோ எழுதியது ..

என் வாழ்க்கை 
வறுமைக் கோட்டிற்கு கீழிருப்பினும்
என் மதிப்பெண் 
சிவப்புக் கோட்டிற்கு மேலிருக்காது..!!!


==============================================================


எங்கே இருக்கிறது
எங்கள் சுதந்திர , குடியரசு இந்திய தேசம் ..??

இந்தியனுக்கு நிறத்தின் பெயரால்
ஆஸ்திரேலியாவில் அடி உதை..!!

இந்தியாவின் மூத்த குடிமகன்
அமெரிக்காவில் அவமானப் படுத்தப் படுகிறார்..!!!

இந்தியாவில் குண்டு எரிந்தவனுக்கு
பாகிஸ்தானில் ஆதரவுப் பேரணி..!!!

இந்தியாவின் ஒரு மொழி பேசும் இனம்
இலங்கையில் கொன்று குவிப்பு ..!!

இந்திய மீனவன் கடலில் சாகிறான்
இலங்கை கப்பற்படை துப்பாக்கி சுட்டு.!!

இந்தியாவின் ஒரு மத நூலுக்கு
ரஷ்யாவில் தடை..!!

எங்கே போனது
எங்கள் சுதந்திர , குடியரசு இந்திய தேசம் ..??

கொலம்பஸ் உயிர்பெற்று வா
உன் இன்னொரு பயணத்தில் 
உண்மையான இந்தியாவை உலகிற்கு காட்டு.!!!



================================================




Now watching @ K TV,
கன்னத்தில் முத்தமிட்டால் "
திரைப்படம் !!

இலங்கைத் 'தமிழ்'
இன்னும் உயிரோடு தான் இருக்கிறது
டிஜிட்டல் காட்சிகளாக..!!!


விடைகொடு எங்கள் நாடே ...( பாடல் )
விளம்பர இடைவேளையில்
மிச்சமிருகிறது - சில துளி கண்ணீராக..!!!





============================================