Friday, January 20, 2012

ஓர் எழுத்தும்
தனித்துப்
பொருள் தரும் தமிழில் !!

ஒற்றை வார்த்தை
பல வகைப்
பொருள் கொள்ளும் தமிழில் !!

யாப்பும் பாவும்
குறளும் காப்பியமும்
கூடிய யாவும் கற்றும்....,
ஆயினும் ...

குழந்தையின் மழலையில்
மட்டுமே புரிந்தது
உயிர் (அ ) எழுத்தின்
உண்மை அர்த்தம்!!

Wednesday, January 11, 2012

நெஞ்சு பொறுக்குதில்லை..!!! பாரதி பாடல் "கவி-பெயர்க்கப் பட்டது"

பிடித்த நடிகன் கடவுள் என்பார்
அந்தத்தலை என்பார் இந்தத்தளபதி என்பார்
திரையில் இன்று கூட்டம் காட்டுவார் - நாளை
திருட்டு சீடியை வீட்டில் பூட்டுவார்

ஊழல் அரசியல் வாதி என்பார்

ஊரில் அவர் ஆட்சிக்கே வாக்களிப்பார்
பேருந்து நிறுத்த, இருக்க மனைஇன்றித் தவிப்பார் -
மருந்தும் மருத்துவ மனையுமின்றி மரிப்பார்!!!

பன்னாட்டு அறிவுநுட்பம் கற்றுத் தேர்வார்

அந்நாட்டு ( அமெரிக்க )அடிமைக் கூலியாய் தேர்வாவார்.
உணர்வும் இல்லற உறவும் பகல்கன வென்பார்
உணவும், இல்லாத உடையும் பாவனை என்பார்

இனமினமென்று நித்தமொரு க(வி)தை சொல்வார்

இலங்கையில் யுத்தம் இங்கிருந்தே கதை கேட்பார்
மீனவன் சிறைபட்டு மீளும்வரை காத்திருப்பார்
சேதுகால்வாயா?? செத்து மடியும் மீன்கள் என்பார்

ஆதி மொழி தமிழ் என்பார்

ஆங்கிலமே அகில மொழி என்பார்
ஆழிப் பேரலை அழிக்கும் என்பார்
அனு மின்உலை வெடிக்கும் என்பார்

அஞ்சி அடிமைப் பட்டுச் சாகிறார்..!!


நெஞ்சு பொறுக்குதில்லை - ஆதலால்

பாரதி பாடல்
கவி பெயர்க்கப் பட்டது..!!

Monday, January 9, 2012

பாரதியின் "காற்று வெளியிடைக் கண்ணம்மா" பாடலை எனது நவீன பாணியில் எழுதி பதிவு செய்யுகிறேன்


நீ என் நெஞ்சில்
வந்திடாத வரை
ஆக்சிஜனுக்கு பஞ்சம் இருந்தது
என் காற்று வெளியில்..!!

உன் வருகையில்
வார்த்தைகள் தேவ அமிர்தமாகவும்
வானத்தில் (அழகிய ) தேவதைகளும்
நிறைத்து இருந்தது..!!

என்னை
நோக்கி வந்தாலும்
எரி கற்கள்
நொறுங்கிச் சாம்பலானது
உன் அரவணைப்பில்..!!

உன்னை தினமும்
பார்த்துக் கொண்டிருந்த நாட்களில்
பூமியை விட்டு
புதிய கிரகத்தை எட்டியது
என் எண்ணக் களிப்பு..!!

திங்கள் இருமுறை
உன்னை
சந்திக்க நேர்ந்த பொழுதுகளில்
வளர்ந்து தேய்ந்திருந்தது ஒரு நிலவு..!!

உன் நினைவுகளில்
உறங்கிய கட்டிலில்
கோடை மழையை
கொட்டித் தீர்த்தது 
என் ஆகாயம்..!!

இன்று வரை...

நீயும் நானும்
சேர்ந்து
நடை போகும் இரவுகளில்
நமக்கு மேல்வானில்
அந்த நிலவும் பயணிக்கிறது...!!

சுப்ரமணிய பாண்டி