Monday, January 9, 2012

பாரதியின் "காற்று வெளியிடைக் கண்ணம்மா" பாடலை எனது நவீன பாணியில் எழுதி பதிவு செய்யுகிறேன்


நீ என் நெஞ்சில்
வந்திடாத வரை
ஆக்சிஜனுக்கு பஞ்சம் இருந்தது
என் காற்று வெளியில்..!!

உன் வருகையில்
வார்த்தைகள் தேவ அமிர்தமாகவும்
வானத்தில் (அழகிய ) தேவதைகளும்
நிறைத்து இருந்தது..!!

என்னை
நோக்கி வந்தாலும்
எரி கற்கள்
நொறுங்கிச் சாம்பலானது
உன் அரவணைப்பில்..!!

உன்னை தினமும்
பார்த்துக் கொண்டிருந்த நாட்களில்
பூமியை விட்டு
புதிய கிரகத்தை எட்டியது
என் எண்ணக் களிப்பு..!!

திங்கள் இருமுறை
உன்னை
சந்திக்க நேர்ந்த பொழுதுகளில்
வளர்ந்து தேய்ந்திருந்தது ஒரு நிலவு..!!

உன் நினைவுகளில்
உறங்கிய கட்டிலில்
கோடை மழையை
கொட்டித் தீர்த்தது 
என் ஆகாயம்..!!

இன்று வரை...

நீயும் நானும்
சேர்ந்து
நடை போகும் இரவுகளில்
நமக்கு மேல்வானில்
அந்த நிலவும் பயணிக்கிறது...!!

சுப்ரமணிய பாண்டி

No comments:

Post a Comment