கூட்டு அடிமைகள் வாழ்ந்த
குட்டித் தீவுகளுக்குள்
தோண்டக் கிடைக்கலாம்
'அகதிகள் நாகரீகம் ' !!
வீட்டுப் பிராணிகளாய்
வளர்க்கப் பட்டிருக்கலாம்
இரத்தம் குடிக்கும்
விலங்குகளும் பூச்சிகளும்!!!
சூரியனின் எந்தத்
திசையின் கீழும்
இருள் அவர்களின்
நிரந்தரப் பொழுதாய் நீண்டிருக்கலாம்!!!
இதுவரை எழுதப்படாத
கொலைக் காதைகள்
புதைக்கப் பட்டிருக்கலாம்
கற்பினியின் சமாதிக்குள் !!
குருதியின் நிறம் ஒன்றே'என
மௌனத்தில் உரையாடியிருக்கலாம்
சடலம் ஆகும்முன்
சண்டையிட்ட உடல்கள் !!
காகம் எறிந்த கற்களாய்
பிணங்கள் வீசப்பட்ட
பெருங்கடல் குவளை
நிரம்பிப் பொங்கும்
சுனாமியில்
தீரக்கூடும்
இனவெறித் தாகம் !!
கடலின் ஓலத்தை
மொழிப்பெயர்க்கும் வரை
நிம்மதியைத் தேடி அலைந்த
படகின் கதையை - அது
சொல்லப் போவதில்லை !!!
No comments:
Post a Comment